டெல்லியின் காற்று மாசு மரண தண்டனைக்கு சமமானது! அதிர்ச்சி தகவல்

டெல்லியில் காற்று மாசுபாடு மற்றும் புழுதி படர்ந்த படலம் கண்ணை மறைப்பதால் பகல் நேரத்திலும் வாகனங்கள் விளக்குகள் எரிய விட்டவாறு செல்கின்றன. இது மரண தண்டனைக்கு சமமானது என அதிர்ச்சி ஆய்வில் தெரியவந்துள்ளது.
 | 

டெல்லியின் காற்று மாசு மரண தண்டனைக்கு சமமானது! அதிர்ச்சி தகவல்

டெல்லியின் காற்று மாசு மரண தண்டனைக்கு சமமானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் காற்று மாசுபாடு உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு  புழுதி படர்ந்த படலம் கண்ணை மறைப்பதால் பகல் நேரத்திலும் வாகனங்கள் விளக்குகள் எரிய விட்டவாறு செல்கின்றன. டெல்லியில் இன்று உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு அளவீட்டு நிர்ணயத்தை விட 35 மடங்கு அதிக காற்று மாசுபாடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டு நவம்பர் மாதத்தில் டெல்லி மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இதற்கு காற்று மாசுபாடே முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் காற்று மாசு காரணமாக 10 லட்சம் பேர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ள நிலையில் காற்று மாசுபாடும் அதன் காரணமாக ஏற்படும் மூச்சுத் திணறல் மற்றும் உடல் நல பாதிப்புகளும் மரண தண்டனைக்கு சமமானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP