Logo

டெல்லி காற்று மாசு - உயர்மட்டக்குழு ஆலோசனை

டெல்லியில் நிலவும் காற்று மாசை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமரின் முதன்மை செயலாளர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

டெல்லியில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. மிக கடுமையான காற்று மாசு அளவான 500ல் இருந்து தற்போது காற்றின் தரம் 625 என்ற குறியீட்டில் உள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. காற்று மாசு காரணமாக இன்று டெல்லி விமான நிலையத்திற்கு வந்த அனைத்து விமானங்களும் ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், லக்னோ ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. அபாய அளவை தாண்டி சுவாசிக்க தகுதியற்ற நிலையில் காற்றின் தரம் உள்ளதால் அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து பிரதமரின் முதன்மை செயலாளர் தலைமையில்  காணொலி காட்சி மூலம் உயர்மட்டக்குழு ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP