முன்னாள் முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை!

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள, ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் பி.எஸ்.ஹூடாவின் இல்லத்தில் சிபிஐ இன்று அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது. ரோதக் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில்இச்சோதனை நடைபெற்று வருகிறது.
 | 

முன்னாள் முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை!

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள, ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் பி.எஸ்.ஹூடாவின் இல்லத்தில் சிபிஐ இன்று அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது.

ஹரியாணாவின் ரோதக் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் குழு, இன்று காலை தொடங்கிய இச்சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 30-க்கும் மேற்பட்ட இடங்களிலும், நில மோசடி வழக்கு தொடர்பான இச்சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஹரியாணா மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் "ஸ்கை லைட்" நிறுவனம், குர்கான் பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக நிலங்களை வாங்கியதுடன், அவற்றை அதிக விலைக்கு விற்றதாக புகார்கள் எழுந்தன.

இந்த புகார்களின் அடிப்படையில், ராபர்ட் வதேரா, ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் பி.எஸ்.ஹூடா உள்ளிட்டோர் மீது, ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ், மாநில போலீஸார் கடந்த செப்டம்பர் 1- ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP