முறியப்போகிறதா பாரதிய ஜனதா - சிவ சேனா உறவு 

மஹாராஷ்டிராவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடக்கவுள்ள நேரத்தில், பாரதிய ஜனதா - சிவ சேனா உறவில் விரிசல் ஏற்படும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.
 | 

முறியப்போகிறதா பாரதிய ஜனதா - சிவ சேனா உறவு 

மஹாராஷ்டிராவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடக்கவுள்ள நேரத்தில், பாரதிய ஜனதா - சிவ சேனா உறவில் விரிசல் ஏற்படும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. 

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது அந்த மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாரதிய ஜனதா - சிவ சேனா கட்சிகளின் கூட்டணி உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது. நடைபெற உள்ள தேர்தலில், 288 இடங்களில் 120 இடங்களையே பாரதிய ஜனதா கட்சி சிவ சேனாவிற்கு ஒதுக்கியுள்ளதால், உத்தவ் தாக்கரே அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்நிலை தொடர்ந்தால் தேர்தல் களத்தில் இரு கட்சியும் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிட நேரும் என்ற நிலை தோன்றியுள்ளது.

மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இதுகுறித்து குறிப்பிடுகையில், "எங்களுக்கு கூட்டணியை கலைக்கும் நோக்கம் இல்லை. பிரச்சனை வந்தால் அதை பேசி சரி செய்துக் கொள்வோம்" எனக் கூறியுள்ளார். 

சிவ சேனா கட்சியின் தலைவர் உதவ் தாக்கரே கூறுகையில், "முதலமைச்சர் தயார் செய்யப் போகும் வேட்பாளர் பட்டியலை கட்சியின் முன் வைத்து விட்டு பின்னர் இது குறித்து தீர்மானிக்க உள்ளோம்" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவார் கட்சியின் சார்பில் போட்டியிட புதிய ஆட்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்போவதாக கூறியுள்ளார். இந்நிலையில்,  தேசியவாத காங்கிரஸை விட்டு பாஜகவுக்கு சென்ற தலைவர்கள் ராதாகிருஷ்ணா வீகே பாட்டில், ஹர்ஷவர்தன் பாட்டில், நாராயண் ரானே ஆகியோரின் இடங்களை வேறு எவராலும் நிரப்ப இயலாது என்பது தேசியவாத காங்கிரஸுக்கு பலவீனமான நிலையைத் தோற்றுவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் இடத்தை தேடிப்பிடிக்க வேண்டிய நிலையிலேயே உள்ளது. 

இதையடுத்து மகாராஷ்டிர மாநிலத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான போட்டியானது பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா கட்சிக்கிடையே மட்டுமே நடைபெறக்கூடிய ஒன்றாகத் திகழ வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அந்த அளவிற்கு காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பலவீனமான நிலையில் இருந்து வருகின்றனர்.

தேசியவாத காங்கிரஸ்  கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தாலும் அமைக்காவிட்டாலும் 30 இடங்களை எட்டிப்பிடிப்பதே மிகவும் கஷ்டமான விஷயமாக இருக்கும் என்று அந்த மாநிலத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP