பீகாரில் கடும் வெப்பத்திற்கு 50 பேர் பலி!

பீகார் மாநிலத்தில் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
 | 

பீகாரில் கடும் வெப்பத்திற்கு 50 பேர் பலி!

பீகார் மாநிலத்தில் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைக்கிறது. சாலைகளில் நடமாடவே பொதுமக்கள் மிகவும் அஞ்சுகின்றனர்.

இந்நிலையில் கடும் வெப்பத்திற்கு பாதிக்கப்பட்டு இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கயா, நவாடா, அவுரங்காபாத் நகர்களில் வெப்பம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. கயா நகரில் மட்டும் இதுவரை கடும் வெப்பத்திற்கு 7 பேரும், அவுரங்காபாத்தில் 2 பேரும், சாத்ரா, சேக்புரா மற்றும் நவாடா நகர்களிலிருந்து தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

பாட்னா நகரில் கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP