வெள்ளத்தில் சிக்கிய துணை முதலமைச்சர் மீட்பு

பாட்னாவில் வெள்ளத்தில் தனது வீட்டில் சிக்கி தவித்த துணை முதலமைச்சர் சுஷில் மோடி மீட்கப்பட்டார்.
 | 

வெள்ளத்தில் சிக்கிய துணை முதலமைச்சர் மீட்பு

பாட்னாவில் வெள்ளத்தில் தனது வீட்டில் சிக்கி தவித்த துணை முதலமைச்சர் சுஷில் மோடி மீட்கப்பட்டார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த சில தினங்களாக விடாமல் பெய்து வரும்  கனமழையால்  நகரத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் பீகாரில் வசிக்கும் லட்சக்கணக்கானோர் தங்களது வாழ்வதாரத்தை இழந்துள்ளனர். இந்த வெள்ளத்தில் அம்மாநில துணை முதலமைச்சர் சுஷில் மோடியும் தனது வீட்டில் சிக்கி தவித்து வந்தார்.

இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கி தவித்த துணை முதலமைச்சர் சுஷில் மோடியை தேசிய, மாநில பேரிடர் மீட்புப்படையினர் மீட்டனர்.

மேலும், உத்தரப்பிரதேசம் மாநிலம் பல்லியா மாவட்ட சிறைக்குள் வெள்ளம் புகுந்ததால் 900 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். 500 கைதிகள் அஸம்கார் சிறைக்கும், மற்ற கைதிகளை அம்பேத்கர்நகர் சிறைச்சாலைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP