ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு மனு தாக்கல்!

பணமோசடி வழக்கில் முன்ஜாமீன் பெற்றுள்ள ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு 2ஆவது முறையாக மனுதாக்கல் செய்துள்ளார்.
 | 

ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு மனு தாக்கல்!

பணமோசடி வழக்கில் முன்ஜாமீன் பெற்றுள்ள ராபர்ட் வதேரா வெ ளிநாடு செல்ல அனுமதி கேட்டு 2ஆவது முறையாக மனுதாக்கல் செய்துள்ளார்.  

   அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா    காந்தியின் மருமகனும், பிரியங்கா  காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா மீது  அமலாக்கத்துறை  பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ராபர்ட் வதேரா முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததையடுத்து, நிபந்தனையுடன் அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.    

இந்நிலையில் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி அ ளிக்கும்படி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று  மனு தாக்கல் செய்துள்ளார். முன் ஜாமீன் பெற்ற பிறகு 2வது முறையாக  ராபர்ட் வதேரா மனு  தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.      

Newstm.in

    

 

 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP