ராபர்ட் வாத்ரா வெளிநாட்டிற்கு செல்ல சிபிஐ நீதிமன்றம் இடைக்கால அனுமதி

ராபர்ட் வாத்ரா மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி அளித்து டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

ராபர்ட் வாத்ரா வெளிநாட்டிற்கு செல்ல சிபிஐ நீதிமன்றம் இடைக்கால அனுமதி

ராபர்ட் வாத்ரா மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி அளித்து டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுலின் மைத்துனரான ராபர்ட் வாத்ரா மீது வெளிநாடுகளில் சொத்து வாங்கியுள்ளது தொடர்பாக அன்னிய செலாவணி முறைகேடு  தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாத்ரா, மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி அளிக்குமாறு கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை இன்று மேற்கொண்ட டெல்லி சிபிஐ நீதிமன்றம், ராபர்ட் வாத்ரா அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கு சென்று வருவதற்கு  6 வார காலம் அவகாசம் அளித்து உத்தரவிட்டது.

அவர் லண்டன் செல்வதற்கு அனுமதி  கிடையாது என்றும் அந்த  உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ராபர்ட் வாத்ரா மீது தேடுப்படும் நபர் எனப்படும் லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டிருந்தால் அதை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP