பிரியங்கா வதேராவின் பேச்சை மதிக்காத காங்கிரஸ் எம்எல்ஏ: யோகியை புகழ்ந்து வேறு பேச்சு

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணித்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தை புறக்கணித்துவிட்டு சட்டப்பேரவையில் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
 | 

பிரியங்கா வதேராவின் பேச்சை மதிக்காத காங்கிரஸ் எம்எல்ஏ: யோகியை புகழ்ந்து வேறு பேச்சு

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணித்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தை புறக்கணித்துவிட்டு சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். 

உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு கூட்டத்தை சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புறகணித்துள்ளன. சிறப்பு பேரவைக்கூட்டத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் அகில பாரத பொதுச் செயலர்  பிரியங்கா வதேரா தலைமையில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ அதிதி, அவர்கள் கட்சியின் போராட்டத்தை புறக்கணித்து விட்டு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். 

இது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ ராய் பரேலி அதிதி சிங் கூறுகையில், நிலைத்த நீடித்த தன்மையுடன் வளர்ச்சி குறித்து ஆலோசனை மேற்கொள்ளவே சட்டப்பேரவையின் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி என்பதில் அரசியலைக் கலக்க நான் விரும்பவில்லை. மேலும் மாநிலம் முழுதும் ஒவ்வொரு உள்ள காலனிகளின் வளர்ச்சிக்காக பிரத்யேகத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஓர் அம்சமாக என் தொகுதியில் உள்ள காலனிகளிலும் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு எங்கள் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். எனக்கு மக்கள் நலன் மட்டுமே முக்கியம் என்று கூறியுள்ளார்.

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP