ராம்ஜன்ம பூமி வழக்கு இவ்வளவு நீடித்ததற்கு காங்கிரஸ் தான் காரணம் - பிரதமர் மோடி, அமித் ஷா குற்றச்சாட்டு!!!

ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் இன்று கலந்து கொண்ட பிரதமர் மோடி, ராம்ஜன்ம பூமி வழக்கின் தாமதத்திற்கு காங்கிரஸ் தான் காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இரண்டு தினங்கள் முன்பு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதே குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
 | 

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 23 வரை 5 கட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அம்மாநில பலமு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது, அயோத்தியாவின் ராம்ஜன்ம பூமி வழக்கு எப்போதோ முடிந்திருக்க வேண்டியது என்றும், காங்கிரஸ் கட்சியின் சுயநலத்தால் தான் அந்த வழக்கு இத்தனை காலம் நீடித்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். எங்கே இந்த வழக்கை கையில் எடுத்தால் சில தரப்பினரின் ஓட்டுக்கள் போய்விடுமோ என்ற பயத்தில் தான் இதை முடிவிற்கு கொண்டு வருவதற்கான செயலில் காங்கிரஸ் இறங்காமல் தவிர்த்து விட்டது என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளார்.

ஜார்க்கண்ட் வரலாற்றில், ஆட்சி கலைக்கப்படாமல், 5 ஆண்டுகளும் முழுமையாக பதவியில் இருந்து ஆட்சி புரிந்தது பாரதிய ஜனதா கட்சி தான் என்று கூறிய அவர், எத்தனை கட்சிகள் எதிர்த்து நின்றாலும் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று ஜார்க்கண்ட் மாநில "ஜல்"(தண்ணீர்), ஜங்கிள் (காடு) மற்றும் ஜமீன் (நிலம்) ஆகிய மூன்றையும் பத்திரமாக பாதுகாக்கும் பாஜக என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை அங்கிருந்த ஆட்சி புரிந்த ஒருவரும் அம்மாநிலத்திலிருந்து பயங்கரவாதத்தை வேறோடு அழிப்பதற்காக அதை எதிர்த்து போராடாததை தொடர்ந்து, தற்போதைய ரகுபர்தாஸ் தலைமையிலான பாஜக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதுடன் இனி வரும் காலங்களில் நக்சலிஸம் என்ற ஓர் அச்சுறுத்தலே அம்மாநிலத்தில் இல்லாது அழிக்க அயராது பாடுபடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP