சிபிஐ காவலில் இருந்தபோது  400  கேள்விகளுக்கு பதிலளித்துள்ள சிதம்பரம்

திஹார் சிறையில் பொருளாதார குற்றவாளிகளுக்கான பிரிவின் கீழ் 7 - ஆம் எண் அறையில் வைக்கப்பட்டுள்ள சிதம்பரம், இரண்டு வார சிபிஐ காவலில் 400 கேள்விகளுக்கான பதில்களை விசாரணையின்போது அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
 | 

சிபிஐ காவலில் இருந்தபோது  400  கேள்விகளுக்கு பதிலளித்துள்ள சிதம்பரம்

திஹார் சிறையில் பொருளாதார குற்றவாளிகளுக்கான பிரிவின் கீழ் 7 - ஆம் எண் அறையில் வைக்கப்பட்டுள்ள சிதம்பரம், இரண்டு வார சிபிஐ காவலில் 400 கேள்விகளுக்கான பதில்களை விசாரணையின்போது அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில், கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி சி.பி.ஐ காவலில் வைக்கப்பட்டார். அவர், விசாரணையின் போது, இந்த வழக்குக்கு சம்பந்தபட்ட 400 கேள்விகளுக்கான பதில்களையும், அந்நிய முதலீட்டு வாரிய ஒப்புதல்கள் குறித்தும் விளக்கமாக பதிலளித்துள்ளார். 

அவரது மகன் கார்த்தி சிதம்பரம், அவர் தொடர்பான நிறுவனங்கள், ஐ.என்.எக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர்கள் இந்திராணி முகர்ஐி மற்றும் பீட்டர் முகர்ஐி சம்பந்தமான கேள்விகளே அவரிடம் கேட்கப்பட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு, இந்திராணி முகர்ஐி சி.பி.ஐ -க்கு அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் படி கார்த்தி சிதம்பரம் அந்நிய முதலீட்டு வாரிய அனுமதி பெற்றுத் தருவதற்கு ரூபாய் 305 கோடி வாங்கியதாகவும், டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து மேலும் ரூபாய் 6.5 கோடி கோரியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்நிய முதலீட்டு வாரிய ஒப்புதல்கள் மற்றும் ரூபாய் 305 கோடி தொடர்பான கேள்விகளுக்கு  விடையளிக்க சிதம்பரம் நிறைய நேரம் எடுத்துக்கொண்டதாக சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச்  2007 - ஆம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு சலுகை வழங்கும் நோக்கில் ரூபாய் 305 கோடி  கார்த்தி சிதம்பரத்தால் பெறப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிபிஐ – யின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் சிதம்பத்தின் மீது  வழக்கு பதிந்துள்ளது

இது தொடர்பாக, யுகே, சுவிச்சர்லாந்து, பெர்முடா, மொரிஷியஸ், மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு கடிதங்கள் அனுப்பி சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் காரத்தியின் சொத்து மற்றம் வங்கிக் கணக்கு விபரங்கள் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது சிபிஐ.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP