தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம்!! எடப்பாடி அரசின் மெகா திட்டம்!!

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக அரியணையில் ஏறி இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுவது அவர் செய்துமுடித்த மக்கள் நலத்திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார், ஏழைகள் பயன்பெறும் வகையிலான திட்டங்களை அறிவித்தார் என்பது தான். குறிப்பாக ஏழைப் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என்ற அறிவிப்பு.
 | 

தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம்!! எடப்பாடி அரசின் மெகா திட்டம்!!

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக அரியணையில் ஏறி இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுவது அவர் செய்துமுடித்த மக்கள் நலத்திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார், ஏழைகள் பயன்பெறும் வகையிலான திட்டங்களை அறிவித்தார் என்பது தான். அதிலும் முக்கியமாக ஏழைப் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என்று அறிவித்த திட்டம் அங்கு பெரும் வரவேற்பை பெற்றதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம்!! எடப்பாடி அரசின் மெகா திட்டம்!!
இந்நிலையில் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டம் வேறு சில மாநிலங்களில் செயல்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், இங்கேயும் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்ற வாக்குறுதி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதே திட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எது எப்படி இருந்தாலும் ஏழைகள் பயன்பெறும் திட்டங்கள் என்றும் வரவேற்றக்கத்தக்கது தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஏற்கெனவே இலவசங்களை அள்ளித் தந்து வாக்குகளை சேகரிக்கும் திராவிட கட்சிகள், இந்த தேர்தலிலும் பெண்களின் வாக்குகளைக் குறிவைத்து, பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் என்கிற திட்டத்தைக் கொண்டு வருவார்கள் என்கிற பேச்சு பரவலாக எழுந்துள்ளது.

குறிப்பாக, அதிமுக சார்பில் தேர்தல் வாக்குறுதிகளில், ஜெயலலிதாவின் பாலிசிகளைக் கடைப்பிடிக்கும் நோக்கில், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், தாலிக்கு தங்கம், பெண் குழந்தைகளுக்கு சிறப்பு திட்டங்கள் என்று பெண் வாக்காளர்களின் வாக்குகளை அள்ளும் நோக்கத்தில் ஏகப்பட்ட சலுகைகளை அவர்களை மனதில் வைத்து இப்போதிலிருந்தே தயார் செய்து வருகிறார்கள் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP