தொண்டர்கள் படை சூழ அருண் ஜெட்லியின் இறுதி ஊர்வலம்...

பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அருண் ஜெட்லியின் உடல் இறுதி சடங்கிற்காக ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.
 | 

தொண்டர்கள் படை சூழ அருண் ஜெட்லியின் இறுதி ஊர்வலம்...

பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அருண் ஜெட்லியின் உடல் இறுதி சடங்கிற்காக ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. 

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் நேற்று நண்பகல் உயிரிழந்தார். அவரது உடல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பல்வேறு கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். 

இதை தொடர்ந்து அருண் ஜெட்லியின் உடல் இறுதி சடங்கு செய்வதற்காக,  நிகாம் போத் காட் பகுதிக்கு தொண்டர்கள் படை சூழ ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்தத்தலைவர்கள், நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர். ஊர்வலம் நிகாம் போத் காட் பகுதியில் உள்ள மயானத்தை சென்றடைந்த பிறகு, அங்கு அவர்களது குடும்ப முறைப்படி இறுதி சடங்கு நடைபெறுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP