மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா ஆட்சி தான் அமையும் - அமித் ஷா கூறியதாக அமைச்சர் ராம்தாஸ் பரபரப்பு தகவல்!!!

மகாராஷ்டிரா மாநில தேர்தல் சர்ச்சரவுகளை தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்த கலந்துரையாடலில் சிவசேனா ஈடுபட்டிருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் சிவசேனாவுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைக்கும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸிடம், உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 | 

மகாராஷ்டிரா மாநிலத்தில், தேர்தல் கூட்டணியாக இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற பாரதிய ஜனதா-சிவசேனா கட்சிகள், ஆட்சி அமைப்பது குறித்த கருத்து வேறுபாட்டினால், கூட்டணியை விட்டு விலகி தனித்தனியே உள்ளது பாகஜ, சிவசேனா கட்சிகள். இதை தொடர்ந்து, எந்த கட்சியாலும் அங்கு பெரும்பாண்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில், தற்போது குடியரசுத் தலைவரது ஆட்சி அமல்படுத்தபட்டுள்ளது. 

இதை தொடர்ந்து, பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வெளிவந்துள்ள சிவசேனா, தற்போது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்தான வேலைகளில் மும்மரமாக உள்ளது. இந்நிலையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ராம்சாஸ் அதவாலே, மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் பாஜக இணைந்து தான் ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக ஓர் பரபரப்பான தகவலை முன்வைத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்து அமித் ஷாவுடன் உரையாடிய போது, அவர் சிவசேனாவும் பாஜகவும் இணைந்துதான் அங்கு ஆட்சி அமைக்கும் என்று கூறியதாகவும், ஆட்சியை நினைத்து வருந்த வேண்டாம் என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே.

முதலமைச்சர் பதவி குறித்த கருத்த வேறுபாடுகளினால் சிவசேனாவும் பாஜகவும் கூட்டணியிலிருந்து வெளிவந்து, பாஜக எதிர்கட்சியில் அமரவும் தயாராகிவிட்டதாக செய்திகள் வெளிவந்ததை தொடர்ந்து, தற்போதைய இவரின் கருத்து அம்மாநில அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP