கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்..!!

கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்..!!
X

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக கூறி நடத்தப்பட்ட என்.ஐ.ஏ. நாடு தழுவிய சோதனைகள் மற்றும் அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு விடுத்துள்ளது.

இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடைபெறும்.


தீவிரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளித்தல், தீவிரவாதச் செயல்களுக்கான பயிற்சி அளிக்க முகாம் அமைத்தல், தீவிரவாத அமைப்புகளில் சேர்வதற்கு ஆட்களை மூளைச் சலவை செய்தல் ஆகியவற்றை பிஎப்ஐ அமைப்பும், அதன் நிர்வாகிகளும், எஸ்டிபிஐ கட்சியும் செய்துவருவதாக என்ஐஏ அமைப்புக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, என்ஐஏ அமைப்பும், அமலாக்கப்பிரிவும் இணைந்து நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் புதன்கிழமை நள்ளிரவு முதல் என்ஐஏ சோதனை நடத்தியது. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 70 மையங்களில் என்ஐஏ சோதனை செய்தது.தேசிய தலைவர் ஓ.எம்.ஏ. சலாம், தேசிய செயலாளர் நஸ்ருதீன் எளமரம் உள்ளிட்ட 106 பேர் நாடு தழுவிய சோதனையில் கைது செய்யப்பட்டனர்.கேரளாவைச் சேர்ந்த 22 பேர் கைது செய்யப்பட்டனர். பிஎப்ஐ மாநிலத் தலைவர் சிபி முகமது பசீர், தேசியத் தலைவர் ஓஎம்ஏ சலாம்,தேசிய செயலாளர் நஸ்ருதீன் இளமாறன் ஆகியோர் என்ஐஏ பாதுகாப்பில் உள்ளனர்.

Next Story
Share it