மலை ரயிலில் பயணித்தபடி 'மலைகளின் அரசி' சிம்லாவை ரசிக்கலாம்!

'மலைகளின் ராணி' என்று அழைக்கப்படும் 'சிம்லா' இமாச்சலப்பிரதேசத்தின் தலைநகராகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 2455 மீட்டர் உயரத்தில் இந்நகரம் கோடைகாலத்தின் புகலிடமாக திகழ்கிறது.
 | 

மலை ரயிலில் பயணித்தபடி 'மலைகளின் அரசி' சிம்லாவை ரசிக்கலாம்!

தமிழகத்தின் ஊட்டி, கொடைக்கானல் போல நார்த் இந்தியா என்று சொன்னாலே நம்முடைய நினைவுக்கு வரக்கூடிய முதல் இடம் சிம்லா. ஹிமாச்சல பிரதேசத்தின் தலைநகராக விளங்கும் சிம்லா 'மலைகளின் ராணி' என்று அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2455 மீட்டர் உயரத்தில் உள்ள இந்நகரம் கோடைகாலத்தின் புகலிடமாக திகழ்கிறது. கோடைகாலத்தில் இதமான ஒரு அனுபவத்தையும் குளிர்காலத்தில் உறைய வைக்கும் அளவுக்கு பனியையும் கொட்டுகிறது இந்த சிம்லா. 

காளி தேவியின் அவதாரமாகக் கருதப்படும் 'சியாமளா' அன்னையின் பெயரில் இருந்து 'சிம்லா' என்ற பெயர் உருவானது. இங்குள்ள ஜக்கு, ப்ராஸ்பெக்ட், அப்சர்வேட்டரி, எலிசியம், சம்மர் போன்ற மலைத்தொடர்கள் காண்போரை வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளன. சிம்லாவைச் சுற்றி பல்வேறு இடங்கள் சுற்றுலாவுக்கு பெயர் போனவை. அவற்றில் குறிப்பிட்ட சிலவற்றை காணலாம். 

ஜக்கு கோவில்:

இக்கோவிலில் இந்துக்கடவுளான அனுமன் ரிட்ஜ் பகுதியின் கிழக்கே 2.5 கிமீ தொலைவில் உள்ளது. தசரா பண்டிகை இங்கு மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிம்லா நகரிலிருந்து 2 கிமீ தூரத்திலும், 8000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஜக்கு மலையுச்சியிலிருந்து, சிம்லா நகரின் அற்புதமான அழகையும் பனிக்கட்டிகள் மூடிய இமயமலைத் தொடர்களையும் காணலாம்.

இதர கோவில்கள்:

அதுபோல் சிம்லாவில் கிறிஸ்தவர்களுக்கான ஒரு தேவாலயம், காசும்ப்தி பகுதியில் உள்ள  புத்த கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் டோர்ஜே ட்ரக் மடாலயம், காளி பாரி கோவில் போன்றவை சிறப்புமிக்கவை. தீபாவளி, நவராத்திரி மற்றும் துர்கா பூஜை காளி கோவிலில் நடைபெறும் திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் பல்வேறு இந்துமத கடவுள்களின் கோவில்கள் இங்கு உள்ளன. இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம் என அனைத்து கடவுள்களின் கோவில்களும் அடங்கிய இடமாக சிம்லா திகழ்கிறது.

குப்ரி: 

 

சிம்லா நகரத்தில் இருந்து 13 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு ஸ்கையிங், பாராக்ளைடிங் உள்ளிட்ட விளையாட்டுகள் நடைபெறும். மிகச்சிறந்த பொழுதுபோக்கு இடமாக இது சுற்றுலா வரும் நபர்களால் பார்க்கப்படுகிறது. சரிவான பாதையில் இருக்கும் இந்த பனிப்படலங்கள் பார்க்கவே ரம்மியமாக இருக்கும். பெரும்பாலாக இந்த இடத்தில் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.  

டவுன் ஹால்:

1910 ல் கட்டப்பட்ட டவுன் ஹால் கவர்ச்சிகரமான பாரம்பரியமிக்க கட்டிடம். தற்போது, இந்த கட்டிடம் சிம்லா நகராட்சி அலுவலகமாக இயங்கி வருகிறது. ரிட்ஜ் நகரில் இருந்து பார்த்தால் இந்த டவுன் ஹாலை பார்க்கலாம். சிம்லா நகரின் மொத்த நிர்வாகமும் இங்கு தான் நடைபெறுகிறது. 

பறவைகள் பூங்கா:

சிம்லாவில் சவுரா மெய்டன் என்ற இடத்தில் பறவைகளின் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இமாச்சலப்பிரதேசத்தின் மாநில பறவையாக அங்கீகரிக்கப்பட்ட மோனல் உட்பட பலவகையான பறவை இனங்களைப் இங்கு பார்த்து மகிழலாம்.

மேலும் பல பார்க்க வேண்டிய இடங்கள்: 

இதுதவிர சோலன் ப்ரேவரி, தர்லாகாட், ஸ்காண்டல் பாயிண்ட், காம்னா தேவி கோவில், ஜக்கு ஹில் மற்றும் குர்க்கா கேட், டாய் ட்ரெயின், குப்ரி, மால் ரோடு, தியோக், ஸ்கேண்டல் பாயிண்ட், போன்றவை அவசியம் பார்க்க வேண்டிய இடங்களாகும். 

 

அடுத்த சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் கிளென் என்ற பகுதியில் மிகுந்த நீரோடைகளையும் பசுமையையும் கொண்டுள்ள இடமாகும். சிம்லாவைச் சுற்றி ஜுங்கா, செயில், சுர்தார், ஷாலி பீக், ஹட்டு பீக் மற்றும் குல்லு போன்ற இடங்கள் சிம்லாவுடன் பல்வேறு வழிகளில் இணைக்கப்பட்டுள்ளன. மலையேறுதலுக்கும் மிக உகந்த இடமாக சிம்லா மலைத்தொடர்கள் விளங்குகின்றன. 

பனிச்சறுக்கு(ஸ்கீயிங்), பாரா கிளைடிங் உள்ளிட்டவை விளையாடுவது இங்கு அனைவராலும் விரும்பக்கூடியது. குளிர்காலத்தில் இந்த இடம் முழுவதும் பனியால் மூடப்பட்டிருப்பதால் அந்த நேரங்களில் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. பெரும்பாலாக டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை அதிக சுற்றுலா பயணிகள் வருவர். 

போக்குவரத்து வசதிகள்:

சண்டிகரிலிருந்து சிம்லா சுமார் 115 கி.மீட்டர் (71.4 மைல்) தூரத்திலும், டெல்லியில் இருந்து சுமார் 365 கி.மீட்டர் (226.8 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. சிம்லாவுக்கு மலை ரயிலில் பயணிப்பது சுகமான அனுபவம். ஒவ்வொரு குகை, பாலத்தை கடந்து ரயில் நிதானமாக பயணிக்கும்போதும் மலை அழகை ரசித்தபடியே செல்வதும் வேறு எங்கும் கிடைக்காத அனுபவம். கல்கா ரயில் நிலையம் வரை பிராட்கேஜ் பாதையும், அங்கிருந்து சிம்லாவுக்கு நேரோ கேஜ் பாதையிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சிம்லாவிற்கு ரயில், விமானம், பஸ்  என அணைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன.  சிம்லா நகரத்தில் இருந்து பெரும்பாலாக அனைத்து இடங்களுக்கும் பேருந்து வசதி வழங்கப்பட்டுள்ளது. சிம்லாவின் மிக நெருக்கமான விமான தளமாக ஜுப்பர்ஹட்டி விமான நிலையம் (Jubbarhatti Airport) விளங்குகிறது. இந்த விமான தளத்திற்கு இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து அடிக்கடி விமானங்கள் உள்ளன. மேலும் சிம்லாவில் இருந்து 12கிமீ தொலைவில் கல்கா ரயில் நிலையம் உள்ளது. அருகில் உள்ள நகரங்களில் இருந்து இங்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலாக அதிகாலையிலே ரயில்கள் அதிகமாக இயக்கப்படுகின்றன. ரம்மியமான அந்த நேரத்தில் செங்குத்தாக செல்லும் மலை ரயிலில் பயணிப்பதே சுகானுபவம் தான். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP