காதலனைக் கொன்று கறிவிருந்து - பெண் கைது

கைவிட்ட காதலனை கொன்று, சமைத்து, கறிவிருந்து பரிமாறியதாக அபுதாபியில் பணியாற்றிவரும் மொராக்கோ நாட்டுப் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு மனநல பரிசோதனையும் நடத்தப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 | 

காதலனைக் கொன்று கறிவிருந்து - பெண் கைது

 கைவிட்ட காதலனை கொன்று, சமைத்து, கறிவிருந்து பரிமாறியதாக அபுதாபியில் பணியாற்றிவரும் மொராக்கோ நாட்டுப் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். 

அபுதாபியில் உள்ள அல் ஐன் பகுதியில் வீட்டு வேலை செய்துவந்த 30 வயது மதிக்கத்தக்க மொராக்கோ பெண்ணுக்கும், மொராக்கோ நாட்டில் இருந்து இங்கு வேலைக்காக வந்திருந்த 20 வயது இளைஞருக்கும் 7 ஆண்டுகாலமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
 
சில வருடங்கள் கழித்து கள்ளக்காதலி மீது கொண்ட காதல் கசந்துப் போன நிலையில், நான் மொராக்கோவுக்கு சென்று நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள போகிறேன் என அவளிடம் அந்த இளைஞர் கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பெண் தன்னை கைவிட்ட காதலனை வீட்டுக்கு வரவழைத்து கொன்று, உடலை துண்டுத்துண்டாக வெட்டி, மிக்சியில் போட்டு, அரைத்துள்ளார். இதனை பிரியாணி போல் சமைத்து உணவை அருகாமையில் உள்ள இடத்தில் கட்டுமான வேலையில் இருந்த தொழிலாளர்களுக்கு விருந்தாக பறிமாறி மகிழ்ந்துள்ளார். 

இந்நிலையில், 3 மாதங்களாக காணாமல்போன அந்த வாலிபரை தேடி அவரது சகோதரர் அந்த பெண்ணின் வீட்டுக்கு சமீபத்தில் விசாரிக்க சென்றார்.  பின்னர் அந்தப் பெண் மீது புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பெண் வீட்டு மிக்சியில் ஒரு மனிதப்பல் சிக்கி இருப்பதை கண்டனர். அந்தப் பல்லை கைப்பற்றி, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகார் அளித்த நபரின் மரபணுவும், அந்த பல்லுக்குரியவரின் மரபணுவையும் ஒப்பிட்டு நடத்தப்பட்ட தடயவியல் பரிசோதனையில் அந்தப் பல்லுக்கு சொந்தக்காரரை அவரது முன்னாள் காதலி கொன்று, கறிவிருந்து படைத்த கதை வெட்டவெளிச்சமானது.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், விசாரணை காவலில் அடைத்து வைத்துள்ளனர். அவருக்கு மனநல பரிசோதனையும் நடத்தப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP