Logo

ஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’

ஜப்பான் நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், நம் நாட்டின் புணே நகரை சேர்ந்த, யோகி எனப்படும் யோகேந்திர பௌராணிக், 41 வெற்றி பெற்றுள்ளார்.
 | 

ஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’

ஜப்பான் நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், நம் நாட்டின் புணே நகரை சேர்ந்த, யோகி எனப்படும் யோகேந்திர பௌராணிக், 41 வெற்றி பெற்றுள்ளார். 

ஜப்பான் நாட்டில், இம்மாதம் 21ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், டோக்கியோவின் எடோகோவா வார்டில், நம் நாட்டின் புணே நகரை சேர்ந்த, யோகி போட்டியிட்டார். 1997ல் பட்டப்படிப்பை முடிந்த இவர், மேல் படிப்புக்காக அந்த ஆண்டு ஜப்பான் சென்றார். 

பல்வேறு ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றிய யோகி, கடைசியாக அங்குள்ள ஓர் வங்கியில் அதிகாரியாக பணியாற்றினார். பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற அவர், தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். அவர் தங்கியிருக்கும் பகுதியில், பல ஆண்டுகளாக சமூக சேவை செய்து வரும் யோகி, அங்குள்ள கான்ஸ்டிடூயன்ட் டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டார். 

அவர் போட்டியிட்ட வார்டில், இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் அதிகம் வசிக்கின்றனர். அவர்களை கவரும் வகையில், வித்தியாசமான தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிட்டார். 

வெளிநாடுகளை சேர்ந்த பெற்றோரின் குழந்தைகள் ஜப்பான் அரசு பள்ளியில் கல்வி பெற ஏற்பாடு செய்வது, வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகளை பராமரிக்க, கூடுதலாக குழந்தை காப்பகங்கள் அமைத்தல், இல்லத்தரசிகளின் பொழுது போக்கிற்காக, விளையாட்டு திடல்கள், பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பல அம்சங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. 

இவரின் தேர்தல் அறிக்கையால் கவரப்பட்ட வாக்காளர்கள், அதிக அளவில் அவருக்கு வாக்களித்தனர். இதன் மூலம், யோகிக்கு, 6,477 வாக்குகள் கிடைத்தன. அவர் அந்த தேர்தலில் வெற்றி பெற்றார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

ஜப்பானில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டினருக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையே பாலமாக இருந்து, இரு தரப்பு நலனில் அக்கறை செலுத்த உள்ளதாக யோகி தெரிவித்துள்ளார். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP