பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் தேர்வு
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்ரான்கானுக்கு ஆதரவாக 176 உறுப்பினர்கள் வாக்களித்தனர், ஷாபாஸ் ஷெரீப்புக்கு 96 பேர் வாக்களித்துள்ளனர். வாக்கெடுப்பில் பேநசிர் புட்டோவின் மகன் ஹிலாவல் தலைமையிலான பாக். மக்கள் கட்சி பங்கேற்கவில்லை.
Sat, 18 Aug 2018
| பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ- இன்சாஃப் கட்சித்தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த பிரதமருக்கான வாக்கெடுப்பில் இம்ரான்கான் வெற்றி பெற்றார். இம்ரான்கானும், நவாஸ் ஷ்ரீப் கட்சியின் ஷாபாஸ் ஷெரீப்பும் பாக் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர். இந்நிலையில் இம்ரான்கானுக்கு ஆதரவாக 176 உறுப்பினர்கள் வாக்களித்தனர், ஷாபாஸ் ஷெரீப்புக்கு 96 பேர் வாக்களித்துள்ளனர். வாக்கெடுப்பில் பேநசிர் புட்டோவின் மகன் ஹிலாவல் தலைமையிலான பாக். மக்கள் கட்சி பங்கேற்கவில்லை. நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றதையடுத்து பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
newstm.in