சாத்தான் மீது கல் எறியும் திருவிழா! 

னர். ஹஜ் புனித யாத்திரையை முன்னிட்டு, மினா மற்றும் மெக்காவில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ள பயணிகள் சாத்தான் மீது கல்லெறியும் முக்கிய சடங்கை நிறைவேற்றினர்.
 | 

சாத்தான் மீது கல் எறியும் திருவிழா! 

சவுதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின் ஒருபகுதியாக சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 

ஹஜ் புனித யாத்திரையை முன்னிட்டு, மினா மற்றும் மெக்காவில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ள பயணிகள் சாத்தான் மீது கல்லெறியும் முக்கிய சடங்கை நிறைவேற்றினர்.

பக்ரீத் பண்டிகையை ஒட்டித் தொடங்கிய ஹஜ் யாத்திரையில் உலகம் முழுவதம் இருந்து சுமார் 20 லட்சம் பயணிகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் அராபத் மலையில் அமர்ந்து குரான் படிக்கும் சடங்கை முடித்த ஹஜ் பயணிகள், இரண்டாவது நாளில் சாத்தான் மீது கல்லெறியும் சடங்கை நிறைவேற்றினர். மினாவில் உள்ள மூன்று பெரிய சுவர்கள் மீது கல் ஏறிந்தனர். ஹஜ் யாத்திரைக்காக லட்சக்கணக்கான பயணிகள் சவுதியில் குவிந்திருப்பதால், மெக்கா மற்றும் மதீனாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP