எத்தியோப்பியா: 157 பேருடன் சென்ற விமானம் வெடித்து விபத்து!
எத்தியோப்பியாவில் இந்தது கென்ய தலைநகர் நைரோபி சென்ற விமானம் இன்று காலை வெடித்து விபத்துக்குள்ளானது. எத்தியோப்பியன் ஏர்லைன்ஸின் போய்ங் 737 ரக விமானமான இதில் விமான ஊழியர்கள் உட்பட 157 பேர் இருந்துள்ளனர்.
எத்தியோப்பியா தலைநகரான அடிஸ் அபபாவில் இருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பிஷோஃப்டு பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விமானம் அதிதாஸ் அபபாவிலிருந்து காலை 8.38 மணிக்கு கிளம்பி கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்டுள்ளது.
இன்று காலை 8.44 மணிக்கு நடந்த இந்த விபத்தில் சிக்கியவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை என்று ஏர்லைன்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்படுவார் என்றும் அதன் பின்னர் அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பாத்தார் மீட்பு குழுவினரை தொடர்பு கொள்ளும் வகையில் அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
The Office of the PM, on behalf of the Government and people of Ethiopia, would like to express it’s deepest condolences to the families of those that have lost their loved ones on Ethiopian Airlines Boeing 737 on regular scheduled flight to Nairobi, Kenya this morning.
— Office of the Prime Minister - Ethiopia (@PMEthiopia) March 10, 2019
குடும்பத்தாருக்கு எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது இரங்கல் தெரிவித்துள்ளார்.
newstm.in
newstm.in