இந்தியாவின் பாராட்டத்தக்க மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, தோனி

யூகௌவ் நிறுவனத்தின் கணக்கெடுப்பின் படி, இந்தியாவின் பாராட்டத்தக்க மனிதர்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடமும், கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி இரண்டாம் இடமும் பிடித்துள்ளார்.
 | 

இந்தியாவின் பாராட்டத்தக்க மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, தோனி

"யூகௌவ்" நிறுவனத்தின் கணக்கெடுப்பின் படி, இந்தியாவின் பாராட்டத்தக்க மனிதர்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடமும், கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர்.

பிரிட்டீஷ் நிறுவனமான "யூகௌவ்", ஆண்டுதோறும், உலகின் பாராட்டத்தக்க மிகச் சிறந்த மனிதர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி, இந்த ஆண்டுக்கான பட்டியலில், உலகளவில் ஆண்களுக்கான பிரிவில் பில் கேட்ஸும், பெண்களுக்கான பிரிவில் மிச்சேல் ஒபாமாவும் முதலிடம் பிடித்துள்ளனர்.

இந்தியாவுக்கான தரவரிசையில், பிரதமர் நரேந்திர மோடியும், குத்துச்சண்டை வீரர் மேரி கோமும் முதலிடம் பிடித்துள்ளனர். 

விளையாட்டு வீரர்களில், உலகளவில் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவும், இந்திய அளவில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியும் முதலிடம் பிடித்துள்ளனர்.

உலகளவில் பாராட்டத்தக்க 20 மனிதர்களின் இந்த தரவரிசை பட்டியலில், பிரதமர் மோடி 6வது இடமும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 10வது இடமும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 14 வது இடமும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 17 வது இடமும் பிடித்துள்ளனர். 

மேலும், உலகளவில், இந்தியாவை சேர்ந்த திரைத்துறை பிரபலங்களான அமிதாபச்சன், ஷாருக்கான், சல்மான் கான், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் மற்றும் சுஷ்மிதா சென் ஆகியோரும் 20 பேர் கொண்ட இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Newstm.in

first 20place

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP