விமானத்தில் இருந்து குதித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவி!

பறந்து கொண்டிருந்த சிறு ரக விமானத்தில் இருந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவி கீழே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

விமானத்தில் இருந்து குதித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவி!

பறந்து கொண்டிருந்த சிறு ரக விமானத்தில் இருந்து  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவி கீழே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் அலானா கட்லாண்ட் (19). இவர் அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில், தொழில்முறை பயிற்சிக்காக ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கருக்கு சென்ற அலானா, வடமேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரங்களில் உயிரினங்கள் குறித்த ஆய்வுப்பணியை மேற்கொண்டார். 

கடந்த 25ஆம் தேதி ஆய்வுகளை முடித்து கொண்டு அஞ்சாஜாவிக்கு சிறிய ரக பயணிகள் விமானத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, 35 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது மாணவி, திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து விமானத்தின் கதவை திறந்துள்ளார். 

இதைகண்டு அதிர்ச்சியடைந்த விமான பயணிகள் அவரை உள்ளே அழைப்பதற்குள் விமானத்தில் இருந்து கீழே குதிக்க முயன்றுள்ளார். அருகில் இருந்த பயணி அவரின் கால்களை கெட்டியாக பிடித்து கொண்டு விமான கதவை அடைக்க முயன்றுள்ளார். ஆனால் மாணவி அதையும் மீறி விமானத்தில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. 

அலானா கட்லாண்ட் விமானத்தில் இருந்த திடீரென குதிப்பதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP