கலிஃபோர்னியா: கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச்சூடு!

கலிஃபோர்னியாவின் ஃப்ரெஸ்னோ அருகே வீட்டின் பின்புறம் அமைந்த புல்வெளியில் அமர்ந்து தொலைக்காட்சியில் கால்பந்து விளையாட்டை கண்டுகொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

கலிஃபோர்னியாவின் ஃப்ரெஸ்னோவில் உள்ள ஒரு வீட்டில் நேற்றிரவு குடும்பத்தின் உறுப்பினர் வீட்டின் பின்புறம் அமைந்த புல்வெளியில் அமர்ந்து தொலைக்காட்சியில் கால்பந்து விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வீட்டின் பின் பகுதியில் பதுங்கியிருந்த மர்மநபர் அங்கு கூடியிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஃப்ரெஸ்னோ போலீசார் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவத்தில் 9 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் சிலர் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், சிலர் இறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மருத்துவமனை அறிக்கைகள் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பதை குறிப்பிடவில்லை என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP