பிஷப்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் - ஃபிலிப்பைன்ஸ் அதிபர் காட்டம்

எதற்கும் உதவாத கத்தோலிக்க பிஷப்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என ஃபிலிப்பைன்ஸ் அதிபர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.90 சதவீத பாதிரியார்கள் ஓரினசேர்க்கையாளர்களாக இருக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
 | 

பிஷப்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் - ஃபிலிப்பைன்ஸ் அதிபர் காட்டம்

கத்தோலிக்க பிஷப்களை எதற்கும் உதவாதவர்கள் என்றும், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் எனவும் ஃபிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டட்ரேட்  கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஃபிலிம்பைன்ஸின் மொத்த மக்கள்தொகையில் 85 சதவீத்துக்கு மேல் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகவே உள்ளனர். இருப்பினும் அந்த நாட்டின் அதிபர் பிஷப்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருகிறார்.

இரு வாரங்களுக்கு முன் அவர்,  "சர்ச்சுளுக்கு வழங்கப்படும் நிதி, நன்கொடைகளில் பெருமளவு திருடப்படுவதாகவும், எனவே யாரும் நன்கொடை வழங்க வேண்டாம்" எனவும் தெரிவித்திருந்தார்.

அவரது இந்த பேச்சுக்கு கத்தோலிக்க பிஷப்கள் மற்றும் பாதிரியார்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், "டட்ரேட் ஒரு நோயாளி" எனவும், "கொடுங்கோல் ஆட்சியாளர்" என்றும் பதில் விமர்சனம் செய்திருந்தனர்.

இந்த நிலையில், ஃபிலிபைன்ஸ் அதிபர்  மாளிகை அலுவலகம் பத்திரிகை செய்திக்குறிப்பு ஒன்றை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. அதில், "நாடு முழுவதும் உள்ள சர்ச்கள் போலியானவையாக உள்ளன. 90 சதவீத பாதிரியார்கள் ஓரினசேர்க்கையாளர்களாக இருக்கின்றனர். எதற்கும் உதவாத கத்தோலிக்க பிஷப்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்" என்று அதில் அதிபர் கூறியுள்ளார்.

அதிபரின் இந்த குற்றச்சாட்டுகளை கத்தோலிக்க திருச்சபை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP