மின்சார காரை அறிமுகம் செய்தது ஆடி நிறுவனம் !

மின்சாரத்தில் இயங்கக்கூடிய காரை முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது பிரபல ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனம் ஆடி. 2019 வருடம் சந்தையில் நுழையவுள்ள இந்த புதிய காரின் விலை சுமார் ஐந்தரை கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எக்ஸ் காருக்கு போட்டியாக பல நிறுவனங்கள் மின்சார கார் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர் இந்நிலையில் உலகின் முன்னணி நிறுவனமான ஆடி, கலிஃபோர்னியா மாகாணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இ-டிரான்  என்று அழைக்கப்படும் மின்சார காரை அறிமுகம் செய்தது.

ஒருமுறை மின்னூட்டம் கொடுத்தாலே இ-டிரான் காரானது 400 கிலோ மீட்டர் வரை செல்லும் என்று ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு சந்தையில் களமிறங்கவுள்ள இ-டிரான் காரின் விலை சுமார் 5 கோடியே 44 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆடி நிறுவனம் தெரிவித்தது.

வோக்ஸ்வேகன் தயாரித்த டீசல் கார்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவிலான வாயுவை வெளியேற்றியதற்காக  அந்த நிறுவனம்  மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூழலில் வோக்ஸ்வேகன்க்கு  சொந்தமான ஆடி நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு எர்த்த  இ-டிரான் காரை அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் டீசல் விலை ஏறிக்கொண்டே போக, மின்சார கார்களுக்கான போட்டி பல நிறுவனங்களிடையே அதிகரித்து கொண்டே தான் வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP