49 குழந்தைகளுக்கு தந்தையான மருத்துவர் - எப்படி சாத்தியமானது?

நெதர்லாந்தைச் சேர்ந்த மருத்துவர், கருத்தரிப்பு மையம் நடத்தி வந்தார்.குழந்தை இல்லாத பெண்கள் ஏராளமானோர் அங்கு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில், அவரே 49 குழந்தைகளுக்கு தந்தையாகியிருக்கிறார். மரபணு சோதனையும் இதை உறுதி செய்கிறது.
 | 

49 குழந்தைகளுக்கு தந்தையான மருத்துவர் - எப்படி சாத்தியமானது?

நெதர்லாந்து நாட்டில் மருத்துவர் ஒருவர் 49 குழந்தைகளுக்கு தந்தையானது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் நூதனமான மோசடி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நெதர்லாந்தின் நிஜ்மேகென் நகரில், ஜான் கர்பாத் என்னும் மருத்துவர் கருத்தரிப்பு மையம் நடத்தி வந்தார். குழந்தை இல்லாத பெண்களுக்கு, பிற ஆண்களின் விந்தணுவை தானமாக பெற்று இவரது கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலமாக தாய்மையடைய வைக்கும் பணி நெடுங்காலமாக நடைபெற்று வந்தது. தற்போதைய மருத்துவ உலகில் இத்தகைய சிகிச்சை முறை பரவலாக பின்பற்றக் கூடிய ஒன்றுதான்.

ஆனால், இங்குதான் கர்பாத் தனது வேலையை காட்டத் தொடங்கினார். அதாவது, தானமாக பெறப்பட்ட மற்றவர்களின் விந்தணுவை பயன்படுத்தாமல், தனது சொந்த விந்தணு மூலம் பெண்களுக்கு சிகிச்சை அளித்தார். இந்நிலையில், வேறுபல முறைகேடு புகார்கள் எழுந்ததால் கடந்த 2009-ஆம் ஆண்டில் அந்தக் கருத்தரிப்பு மையம் மூடப்பட்டது.

49 குழந்தைகளுக்கு தந்தையான மருத்துவர் - எப்படி சாத்தியமானது?

மருத்துவர் கர்பாத் கடந்த 2017-ஆம் ஆண்டில் தனது 89-ஆவது வயதில் இறந்தார். அதற்கு சில நாள்களுக்கு முன்பு, மாபெரும் ரகசியத்தை ஒப்புக் கொண்டார் அவர். அதாவது, தன்னுடைய விந்தணு மூலமாக 60 குழந்தைகளை பிறக்க வைத்ததை பகிரங்கமாக அறிவித்தார். இந்நிலையில், அவரது கருத்தரிப்பு மையம் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இதில், மருத்துவரின் மரபணுவை எடுத்து பரிசோதிக்க அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், அத்தகைய சோதனையை நடத்த நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. அதன்படி, 49 குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் அனைவருமே மருத்துவர் கர்பாத்தின் வாரிசுகள் என்பது உறுதியாகியிருக்கிறது. இந்த சோதனைக்கு வராத இன்னும் எத்தனை குழந்தைகள் அவருக்கு இருக்கிறார்கள் என்பது வெளிவராத ரகசியம்தான்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP