இந்தோனேசியா சிறையிலிருந்து 113 கைதிகள் தப்பி ஓட்டம்; 26 பேர் பிடிப்பட்டனர்

மேற்கு இந்தோனேசியாவில் உள்ள சிறையில் இருந்து பாதுகாவலரை தாக்கி 100க்கும் அதிகமான கைதிகள் தப்பித்து சென்றுள்ளனர். இதில் 26 பேரை அதிகாரிகள் பிடித்துள்ளனர். மேலும் 87 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
 | 

இந்தோனேசியா சிறையிலிருந்து 113 கைதிகள் தப்பி ஓட்டம்; 26 பேர் பிடிப்பட்டனர்

மேற்கு இந்தோனேசியாவில் உள்ள சிறையில் இருந்து பாதுகாவலரை தாக்கி 100க்கும் அதிகமான கைதிகள் தப்பித்து சென்றுள்ளனர். 

இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள லம்பரோ சிறையில் நேற்று மாலை நேர பிரார்த்தனை நடந்துள்ளது. அதில் சிறையில் இருந்த 720 கைதிகள் கலந்து கொண்டனர். அந்த கூட்டம் முடிவதற்குள் சிறையில் இருந்து 113 பேர் பாதுகாவலரை தாக்கிவிட்டு தப்பித்துள்ளனர். அவர்களில் 26 பேரை போலீசார் மீண்டும் பிடித்து சிறையில் அடைத்தனர். மேலும் 87 பேரை தேடும் பணி தற்போது நடந்து வருகிறது. 

சிறைக்கு அருகே இருக்கும் பந்தா அசே சாலைகள் அனைத்தையும் போலீசார் அடைத்துள்ளனர். தப்பித்தவர்களில் அதிகமானோர் போதைப்பொருள் பயன்படுத்தி சிறைக்கு வந்தவர்கள் என்று சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தோனேசியாவில் தொடர்ந்து சிறையில் இருந்து கைதிகள் தப்பிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP