உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: அமெரிக்க மருத்துவர்கள் சாதனை

குண்டுவெடிப்பில் காயமடைந்த அமெரிக்க ராணுவ வீரருக்கு முதன் முறையாக ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
 | 

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: அமெரிக்க மருத்துவர்கள் சாதனை

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: அமெரிக்க மருத்துவர்கள் சாதனைஆப்கன் குண்டுவெடிப்பில் காயமடைந்த ராணுவ வீரருக்கு, உலகின் முதன் முறையாக ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆப்கன் குண்டுவெடிப்பில் சிக்கி பாதிப்புக்குள்ளான அமெரிக்க ராணுவ வீரருக்கு தான் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டு அமெரிக்க மருத்தவக் குழு ஒன்று சாதித்துள்ளது. 

அமெரிக்க ராணுவப் படையை சேர்ந்த வீரர் ஒருவர் ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கியதில், அவரது அடி வயிறு பகுதியில் ஆணுறுப்பு உள்ளிட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன. இவருக்கு சிகிச்சை அளித்து உடல் நலம் குணமான நிலையில், இவருக்கு ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையையும் மேற்கொள்ள முடியும் என்ற முடிவுக்கு வந்தது மேரிலேண்டில் உள்ள பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவக் குழு. 

அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆணுறுப்பு மற்றும் விரைப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனைத்துவிதமாக சோதனைகளையும் மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவருக்கு மரணம் அடைந்த ஒரு நபரின் உறுப்பை தானமாக பெற்று மருத்துவர்கள் பொருத்தினர்.

11 மருத்துவர்கள் அடங்கிய குழு 14 மணிநேரம் சிகிச்சை மேற்கொண்டு இந்த உலகின் முதலாவது ஆணுறுப்பு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். தற்போது ராணுவ வீரர் முழு உடல் நலத்தோடு உள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP