அதிக நேரம் செல்போன் உபயோகிப்பவரா? அப்ப உங்க குழந்தைக்கு ஆபத்து!

பெற்றோர்கள் அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவதால் அவர்களின் குழந்தைகளின் பழக்கவழக்கங்களிலும் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
 | 

அதிக நேரம் செல்போன் உபயோகிப்பவரா? அப்ப உங்க குழந்தைக்கு ஆபத்து!

பெற்றோர்கள் அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவதால் அவர்களின் குழந்தைகளின் பழக்கவழக்கங்களிலும் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ஸ்மார்ட்போன்களின் மோகம் அதிகரித்துவரும் சூழ்நிலையில், பெற்றோர்கள் அலுவலக நேரத்தை தவிர வீட்டிற்கு வந்த பிறகும் அலுவலகம் தொடர்பான வேலைகளை செல்போனிலும், லேப்டாப்களிலும் செய்துகொண்டு இருக்கின்றனர். பெற்றோர்களை இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் குழந்தைகள், அவர்கள் நமக்காக நேரம் ஒதுக்கமாட்டார்கள் என்ற எண்ணத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

அமெரிக்கா இல்லினாய்வ் மாகாண பல்கலைக் கழகம், மிக்சிகன் பல்கலைக் கழகங்களை சேர்ந்த நிபுணர்கள் 172 குடும்பங்களை வைத்து நடத்திய ஆய்வில், பெற்றோர்களின் ‘ஸ்மார்ட் போன்’ செயல்பாட்டினால் குழந்தைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். பொதுவாக சில பெற்றோர்கள் நாள் ஒன்றுக்கு 9 மணி நேரத்தை  ஸ்மார்போன்களில் கழிக்கின்றனர். தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதை விட, ஸ்மார்ட்போனுடன்தான் அதிக நேரம் செலவிடுகின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த சூழ்நிலையில் வளரும் குழந்தைகள்,பெற்றோர்களை போல படிப்பிலும், விளையாட்டிலும் கவனத்தை செலுத்தாமல் ஸ்மார்ட்போனின் மீது கவனத்தை திருப்பிவிடுகின்றனர். இதனால் ஸ்மார்ட்போனுக்கு சிறு வயதிலே அடிமையாகும் சூழல் உருவாகிறது. இதை குழந்தைகள் மத்தியில் உருவாக்குவது பெற்றோர்களே!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP