ஹோண்டுராஸ் நாட்டு தேர்தல் முடிவுக்கு எதிராக வன்முறை

ஹோண்டுராஸ் நாட்டு தேர்தல் முடிவில் அதிருப்தி, வன்முறை வெடித்தது
 | 

ஹோண்டுராஸ் நாட்டு தேர்தல் முடிவுக்கு எதிராக வன்முறை


மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. ஏற்கனவே அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஜூயன் ஒர்லாண்டோ ஹெர்னண்டெஸ் இப்போதைய ஜனாதிபதி தேர்தலிலும் வென்றாக கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. 

இந்த தேர்தல் தொடர்பாக பல்வேறு விம்ரசனங்கள் எழுந்திருந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவரும் போட்டி வேட்பாளருமான சல்வேடர் நஸ்ரல்லா தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறைகேடுகள் நடந்துள்ளதாக சந்தேகத்தைக் கிளப்பினார். அத்துடன் தேர்தல் தீர்ப்பாயம் ஆளும் தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டதாலேயே இவ்வாறான முறைகேடுகள் நிகழ்ந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த அதிருப்தி காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதிக்க, அங்கு இப்பொழுது வன்முறை வெடித்துள்ளது. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஓர் ஆர்ப்பாட்டக்காரர் உயிரிழந்துள்ளார். 

இந்த மோதல்களில் 14 பேர் இறந்துள்ளதாக ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ள நிலையில், 3 பேர் மட்டுமே இறந்துள்ளதாக போலீஸ் தெரிவிக்கின்றது. இதனால் அந்நட்டில் பதற்றமான சூழல் நிலவுகின்றது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP