குடியேறிகளின் குடும்பத்தை பிரிக்கும் ட்ரம்ப்: மெலினியா ட்ரம்ப் கடும் எதிர்ப்பு 

அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களை பிரிக்கும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டத்துக்கு அவருடைய மனைவி மெலினியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 | 

குடியேறிகளின் குடும்பத்தை பிரிக்கும் ட்ரம்ப்: மெலினியா ட்ரம்ப் கடும் எதிர்ப்பு 

அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களை பிரிக்கும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டத்துக்கு அவருடைய மனைவி மெலினியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறும் விவகாரம் ட்ரம்ப் அதிபராக பதவி ஏற்ற பிறகு மிக பெரிய பிரச்னையாக உருவெடுக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், சட்ட விரோதமாக குடியேறுபவர்களின் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு டிரம்பின் மனைவி கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மெலினியா ட்ரம்ப் கூறுகையில், "குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படுவதை பார்க்க வெறுக்கிறேன். ஒரு வெற்றிகரமான குடியேற்ற சீர்திருத்தத்தையே நான் விரும்புகிறேன்" என்றார். 

இதே போல, முன்னாள் அதிபர் புஷ்ஷின் மனைவி லாரா புஷ், "குழந்தைகளை பெற்றோர்களிடம் இருந்து பிரிப்பது ஒழுக்கமற்றது" என விமர்சனம் செய்துள்ளார். 

அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு மட்டுமே முதன்மையான உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கையை அதிபர் ட்ரம்ப் பின்பற்றி வருகிறார். இந்த நிலையில், மெக்சிகோ குடியேறிகளால் அங்கு மிகப் பெரிய பாதுகாப்பு பிரச்னைகளும் நிதிசுமையும் ஏற்படுவதாக அவர் அவ்வப்போது புலம்பி வருகிறார். இதற்காக மெக்சிகோ எல்லையில் அமெரிக்க பகுதிகளில் சுவர் எழுப்புவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடும்பமாக நுழைபவர்கள் தனித்தனியாக பிரிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள். கடந்த 6 வார காலங்களில் மட்டும் இதுபோன்று 2 ஆயிரம் குடும்பங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அடைக்கலம் கோரி அமெரிக்காவுக்கு நுழைபவர்கள் பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. குடும்பங்கள் பிரிக்கப்படுவதால் நூற்றுக்கணக்கான சிறார்களும் தடுப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது எதிர்பார்க்காத ஒரு கொள்கை முடிவு என சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் குழுக்கள் விமர்சனம் செய்துள்ளன.

ட்ரம்பின் குடியரசுக் கட்சியிலுமே இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. நீதிமன்றத்தின் விமர்சனத்துக்கும் ட்ர்மப் ஆளாகியுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP