ஜி20-யில் புடின் சந்திப்பை ரத்து செய்தார் ட்ரம்ப்!

ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்திக்க இருந்த நிலையில், உக்ரைன் விவகாரத்தினால் சந்திப்பை ரத்து செய்வதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 | 

ஜி20-யில் புடின் சந்திப்பை ரத்து செய்தார் ட்ரம்ப்!

ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்திக்க இருந்த நிலையில், உக்ரைன் விவகாரத்தினால் சந்திப்பை ரத்து செய்வதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான போர்க் கப்பல்கள் மீது ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி, போர்க்கப்பல்களை கைப்பற்றிய விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து விட்டு, பின்னர் அந்த சந்திப்பை ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில் புடினுடனான சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை எதையும் கூறவில்லை.

ஆனால், ரஷ்ய அரசு தரப்பில் இருந்து, இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் இரண்டு மணிநேரம் சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின இதற்கிடையே ட்ரம்ப்பின் தனிப்பட்ட விவகாரங்களுக்கான வழக்கறிஞர், மைக்கேல் கோஹன், அமெரிக்க நாடாளுமன்ற கமிட்டியிடம் பொய் வாக்குமூலம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். ரஷ்யாவுடன் பல்வேறு தொடர்புகள் இருப்பதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

அமெரிக்க அதிபர் ஆவதற்கு முன்பாகவே ரஷ்யாவில் எந்த விதமான தொழில் தொடர்பும் தனக்கும் தனது உறவுகளுக்கும் இல்லை என ட்ரம்ப் கூறி இருந்த நிலையில், மைக்கேலின் வாக்கு மூலத்தில் ட்ரம்ப் அங்கு ரகசியமாக தொழில் பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இந்த சமயம், புடினுடனான சந்திப்பை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார் ட்ரம்ப். உக்ரைன் விவகாரம் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். ஆனால் அவரது தனிப்பட்ட வழக்கறிஞர் கொடுத்த வாக்குமூலத்தின் காரணமாகவே இந்த சந்திப்பு ரத்து செய்யப்ட்டுள்ளதாக அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP