உலக தலைவர்களை கேள்விகேட்ட 'டைம்' பத்திரிகை செல்வந்தரிடம் விற்பனை! 

சர்வதேச அளவில் புகழ்பெற்ற அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழான 'டைம்' பத்திரிக்கையை 190 மில்லியன் டாலர் கொடுத்து மார்க் பேனியாஃபும் அவரது மனைவியும் இணைந்து வாங்கியுள்ளனர்.
 | 

உலக தலைவர்களை கேள்விகேட்ட 'டைம்' பத்திரிகை செல்வந்தரிடம் விற்பனை! 

சார்வதேச அளவில் புகழ்பெற்ற அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழான 'டைம்' பத்திரிக்கையை 190 மில்லியன் டாலர் கொடுத்து செல்வந்தர் ஒருவர் வாங்கியுள்ளார்.

ஆங்கில வார இதழான டைம் பத்திரிக்கையை மெர்டித் கார்ப்பரேசன் என்ற நிறுவனம் நடத்தி வந்தது. சேல்ஸ் ஃபோர்ஸ் நிறுவனத்தின் மார்க் பேனியாஃபும் அவரது மனைவியும் இணைந்து 190 மில்லியன் டாலருக்கு டைம் வார இதழை வாங்கியுள்ளனர்.

டைம் பத்திரிக்கை மொத்தமாக வாங்கியதால் பத்திரிக்கையின் அன்றாட நடைமுறைகள், இதழியல் சார்ந்த முடிவுகள் எதிலும் பேனியாஃப் தலையிடமாட்டார். அதில் எந்த ரீதியான மாற்றமும் இதழியல் தர்மமும் மாற்றப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மேலும் பேனியாஃபும் கூறுகையில், ''உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய 'டைம்' பத்திரிக்கையில் முதலீடு செய்திருக்கிறேன். டைம் இதழ் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்க செய்வதாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் திகழ்கிறது. இது அதே போலவே மிளிரும். இதனை வாங்கியதில் பெருமை கொள்கிறோம்'' என்றார்.

டைம் பத்திரிக்கை தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் பலதரப்பட்ட விஷயங்களில் மக்களின் குரலாக கருத்துக்களை வெளிக்கொனர்ந்து வரவேற்பை பெற்று வந்த பத்திரிக்கை யாகும். டைம்  இதழ் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் தான் மெரிடித் கார்பரேஷன் என்ற நிறுவனத்திடம் விற்கப்பட்டது. 

இதே போல கடந்த 2013ல் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையை அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெஸாஸ் வாங்கினார். தி அட்லாண்டிக் போஸ்ட் பத்திரிகையின் பெருமளவு பங்குகளை மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவின் லாரென் ஜாப்ஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP