சவுதிக்கான ஆதரவை பின்வாங்கியது அமெரிக்க நாடாளுமன்றம்; ட்ரம்ப்புக்கு செக்!

ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி தலைமையில் ஏமனில் நடைபெற்று வரும் போருக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க படைகளை அங்கிருந்து பின்வாங்க நாடாளுமன்ற செனட் சபை வாக்களித்துள்ளது.
 | 

ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி தலைமையில் போர் நடைபெற்று வருகிறது. இந்த போருக்கு ஆதரவாக அமெரிக்க படைகளும் செயல்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சவுதி அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார். ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த போருக்கு ஆதரவு இல்லை. 

சவுதி தலைமையில், ஏமனில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. போரில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அனுப்பப்டும் நிவாரண பொருட்களை சவுதி தடுத்து வைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏமன் போர் குறித்து ஐநா கூட வருத்தம் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில், ஏமன் போரில் இருந்து அமெரிக்க படைகளை பின்வாங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் குடியரசு கட்சி பெரும்பான்மை வகிக்கும் செனட் சபையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சி பெரும்பான்மை வகிக்கும் கீழ் சபையிலும் அது பெருவாரியாக நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மசோதாவுக்கு அதிபர் ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அவரது கட்சியினரே அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர். இன்னும்  1 மாதத்தில் அமெரிக்க படைகளை திரும்பப்பெற வேண்டும் என நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP