அமேசான் தலைவரை பிளாக்மெயில் செய்த பிரபல ஊடகம்

அமேசான் நிறுவன தலைவரும் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரருமான ஜெப் பெஸோஸின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு விடுவோம் என அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஊடகம் மிரட்டியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
 | 

அமேசான் தலைவரை பிளாக்மெயில் செய்த பிரபல ஊடகம்

அமேசான் நிறுவன தலைவரும் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரருமான ஜெப் பெஸோஸின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு விடுவோம், என அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஊடகம் ஒன்று அவரை மிரட்டியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

உலகிலேயே மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானின் தலைவர் ஜெப் பெஸோஸ், சமீபத்தில் அவரது மனைவியுடன் விவாகரத்து செய்ய உள்ளதாக தெரிவித்தார். அவர் விவாகரத்து செய்வதாக தெரிவித்த அதே நாளில், அமெரிக்காவின் பிரபல ஊடகமான நேஷனல் என்குவைரரில், பெஸோஸ் அவரது நண்பரின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்து இருந்ததால், அவரது மனைவி பிரிந்து செல்வதாகவும், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததற்கு ஆதாரமாக, மெசேஜ்கள், புகைப்படங்கள் ஆகிவற்றையும் வெளியிட்டது. நேஷனல் என்குவைரர் செய்தி குறித்து பெஸோஸ் எதுவும் கூற மறுத்துவிட்டார்.

ஆனால், ஒரு தனியார் புலனாய்வு அதிகாரியின் குழுவை வைத்து, தனது அந்தரங்க புகைப்படங்களும் மெசேஜ்களும் அந்நிறுவனத்துக்கு எப்படி சென்றது, என்பது குறித்து விசாரிக்க அவர் முடிவெடுத்தார். வாஷிங்டன் போஸ்ட் என்ற பிரபல அமெரிக்க ஊடகத்தை, பெஸோஸ் வாங்கி கடந்த சில வருடங்களாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே உள்ள ரகசிய தொடர்புகளை பற்றி, பல்வேறு தடாலடியான செய்திகளை வெளியிட்டு வருகிறது. அதனாலேயே, ட்ரம்ப் ஆதரவு ஊடகமான நேஷனல் என்குவைரர், ஜெப் பெஸோஸின் பெயரைக் கெடுப்பதற்காகவே இவ்வாறு செய்திருக்கலாம் என கூறப்பட்டது. இது குறித்து விசாரித்து வந்த தனியார் புலனாய்வு அதிகாரியும், இது அரசியல் காரணங்களுக்காக வெளியிடப்பட்ட செய்தி தான், என சந்தேகிப்பதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, நேஷனல் என்குவைரர் ஊடகத்திலிருந்து, தனக்கு ஒரு ஈமெயில் வந்ததாகவும், அந்த ஈமெயிலில், மேலும் பல அந்தரங்க, ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில்  வெளியிட்டு விடுவோம் என நேஷனல் என்குவைரர் நிறுவனம் தன்னை மிரட்டியதாக பெஸோஸ் தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவனம் அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக பெஸோஸை குறிவைப்பதாக அவர் குற்றம்சாட்டி வருவதை நிறுத்தாவிட்டால், இந்த புகைப்படங்களை வெளியிட்டு விடுவோம் என அவர்கள் மிரட்டியதாக, தனக்கு வந்த ஈமெயில் ஆதாரத்துடன் பெஸோஸ் இணையத்தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த சம்பவம், அமெரிக்க ஊடகத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP