சைகை மொழியில் பேசிய கோகோ கொரில்லா உயிரிழந்தது

சைகை மொழியில் பேசி அனைவரையும் கவர்ந்த கோகோ கொல்லா உயிரிழந்தது.
 | 

சைகை மொழியில் பேசிய கோகோ கொரில்லா உயிரிழந்தது

சைகை மொழியில் பேசி அனைவரையும் கவர்ந்த கோகோ கொல்லா உயிரிழந்தது. 

உலகிலேயே முதன் முதலாக சைகை மொழியில் பேசி பிரபலமானது கோகோ என்னும் கொரில்லா. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பகுதியில் 1971ம் ஆண்டு பிறந்தது இந்த கொரில்லா. அது பிறந்தது முதல் அதன் பாதுகாவலர் அதற்கு சைகை மொழியை கற்றுத்தந்துள்ளார். அதனால் முதல் பிறந்தநாளிலேயெ சைகையின் மூலம் பேசத் தொடங்கியது. பின் இதுகுறித்து பல ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டன.  அதன் மூலம் உலகளவில் பலரையும் கவர்ந்தது கோகோ. 

நேஷனல் ஜியோகிராஃபிக் இதழின் அட்டைப் படத்தில் இரண்டு முறை இடம்பெற்றது. அந்த பத்திரிகையின் அக்டோபர் 1978 மற்றும் ஜனவரி 1985 ஆகிய இதழ்கள் கோகோவின் படத்தைத் தாங்கி வெளியாகின. மிருகக் காட்சி சாலையில் வசித்த இந்த கொரில்லா வியாழக்கிழமை தூக்கத்திலேயே உயிரிழந்ததாக கொரில்லா அறக்கட்டளை கூறியுள்ளது. கோகோவின் மரணத்திற்கு உலகம் முழுவதும் உள்ள விலங்கின ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP