முயலை பிடித்த நரி... நரியை தூக்கிய கழுகு - வைரல் வீடியோ

முயலை இரையாக பிடித்து வாயில் கவ்விச் சென்ற குட்டி ஓநாயை, வானத்தில் இருந்து பறந்து வந்த கழுகு, கண் இமைக்கும் நேரத்தில் இரு கால்களால் பிடித்துச் சென்ற காணொலி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

முயலை பிடித்த நரி... நரியை தூக்கிய கழுகு - வைரல் வீடியோ

முயலை பிடித்த நரி... நரியை தூக்கிய கழுகு - வைரல் வீடியோ

முயலை இரையாக பிடித்து வாயில் கவ்விச் சென்ற நரியை, வானத்தில் இருந்து பறந்து வந்த கழுகு, கண் இமைக்கும் நேரத்தில் இரு கால்களால் பிடித்துச் சென்ற காணொலி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வடமேற்கு வாஷிங்டன் மாகாணம் அருகே உள்ள சான் ஜூவான் தீவில் உள்ள தேசிய பூங்காவில் தான் இந்த அபூர்வ காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது. தான் பிடித்த இரையை விட நரிக்கு மனதில்லை. இதனால், முடிந்த வரை கழுகுக்கு அதை விட்டுக்கொடுக்காமல் போராடியது. கழுகும் நரியை தூக்கிக்கொண்டு 20 அடி உயரத்துக்கு பறந்தது.


கழுகின் பிடி அழுத்தமாக இருந்ததால் நரியால் ஒரு கட்டத்துக்கு மேல் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால், முயல் மீது இருந்த தன்னுடைய பிடியை விட்டு தரையில் விழுந்தது. அதன்பின் அந்த கழுகு, நரி பிடித்த முயலுடன் மேலெழும்பி சென்ற எட்டு விநாடி சண்டைக் காட்சிகள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

கவலை வேண்டாம், நரி பத்திரமாக உள்ளது என்று இந்த நிகழ்வை படம் பிடித்த புகைப்பட கலைஞர் கெவின் எபி தன்னுடைய டாக்குமெண்டரியில் தெரிவித்துள்ளார். இந்த காட்சிகளை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP