அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் கட்டுப்பாடு

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் விதித்து பாகிஸ்தான் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதர அதிகாரிகளுக்கு சமீபத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 | 

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் கட்டுப்பாடு

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் கட்டுப்பாடுஅமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் விதித்து பாகிஸ்தான் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதர அதிகாரிகளுக்கு சமீபத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பயங்கரவாத ஒழிப்பு போரில் அமெரிக்காவுடன் கூட்டாக செயல்பட பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால், தனது நாட்டில் நிலவும் பயங்கரவாத செயல்பாடுகளையே பாகிஸ்தானால் கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலையையும் பயங்கரவாத வழக்குகள் சிலவற்றில் மெத்தனம் காட்டுவதையும் அமெரிக்கா தொடர்ந்து கண்டித்து வருகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதி உதவிகளை அமெரிக்கா நிறுத்தி வைத்து உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலும், பிற நகரங்களிலும் உள்ள பாகிஸ்தான் துணை தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாட்டினை ட்ரம்ப் அரசு சமீபத்தில் அறிவித்தது.

இதன்படி, அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மற்றும் துணைத்தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் தாங்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ள நகர எல்லையில் இருந்து 25 மைல் பரப்புக்குள் இருக்க வேண்டும். அதைத்தாண்டி வெளியே போகக்கூடாது.

கடந்த 1-ந் தேதி முதல் இந்தப் பயணக்கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இருந்தன. ஆனால் பின்னர் அமெரிக்கா இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதை தள்ளிவைத்தது.

பின், நேற்று (வியாழக்கிழமை) முதல் இந்த கட்டுப்பாடுகள் அமெரிக்காவில் அமலுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இதே போன்ற கட்டுப்பாடுகளை தன் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், " 

அமெரிக்காவில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டு உள்ள பயணக்கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறபோது, பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் விதிக்கப்படுகிற கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என கூறப்பட்டு உள்ளது.

அந்த வகையில் பாகிஸ்தான் தூதரகத்தினருக்கு அமெரிக்கா விதித்த பயண கட்டுப்பாடுகள் நேற்று அமலுக்கு வந்தன. 

ஏற்கனவே பாகிஸ்தானில் பணி அமர்த்தப்பட்டு இருக்கிற அமெரிக்க தூதரக, துணைத் தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் உயர் பாதுகாப்பு பகுதிகளுக்கும், பழங்குடியினர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கும் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP