இரைச்சல் இல்லாத விமான பயணம்: நாசா சாதனை 

விமானம் பறக்கும்போது ஏற்படும் இரைச்சல் ஒலியை 70 சதவீதம் குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
 | 

இரைச்சல் இல்லாத விமான பயணம்: நாசா சாதனை 

விமானம் பறக்கும்போதும் தரை இறங்கும்போதும் ஏற்படும் இரைச்சல் ஒலியை 70 சதவீதம் குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். 

விமானத்தில் பயனிக்கும்போது அதன் இரைச்சல் சத்தம் என்றாலே பலருக்கும் ஒவ்வாமையும் தலைவலியும் ஏற்பட்டுவிடும்.  மிகவும் சொகுசான விமான பயணத்திலும் இது மிகப் பெரும் குறையாக இருந்து வந்தது. 

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா), விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் ஒலியைக் குறைக்க நீண்ட காலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், பல்வேறு சோதனைகளுக்குப் பின் அதில் குறிப்பிடதக்க வெற்றியை நாசா எட்டியுள்ளது. 

நாசாவின் சோதனை விமானங்களில் நடத்தப்பட்ட பல்வேறு மாற்றங்களுக்குப் பின் அவை இயக்கப்பட்டபோது இரைச்சல் ஒலி 70% குறைந்துள்ளது. இதற்காக விமான அமைப்பில் மூன்று தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

இந்த அளவுக்கு விமானத்தின் இரைச்சல் குறைக்கப்படுவது விமான நிலையத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  உலகெங்கும் விமான நிலையங்கள் அமைந்திருக்கும் பெருநகர மக்களுக்கு விமான இரைச்சல் தொல்லை என்பது தீர்க்க முதியாத ஒன்றாக இருந்தது. பல நாடுகளில் இதற்காக வழக்குகள் பலவும் கூட பதிவாகியுள்ளன. 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP