குரங்கு எடுத்த செல்ஃபி: பீட்டாவுக்கு விளக்கம் அளித்த அமெரிக்க நீதிமன்றம்

குரங்கு எடுத்த செல்ஃபிக்கு யாரும் காப்புரிமை வாங்க முடியாது என பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 | 

குரங்கு எடுத்த செல்ஃபி: பீட்டாவுக்கு விளக்கம் அளித்த அமெரிக்க நீதிமன்றம்

குரங்கு எடுத்த செல்ஃபி: பீட்டாவுக்கு விளக்கம் அளித்த அமெரிக்க நீதிமன்றம்குரங்கு எடுத்த செல்ஃபிக்கு யாரும் காப்புரிமை வாங்க முடியாது என பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2011-ஆம் ஆண்டு  இந்தோனேசியா காட்டுப்பகுதியில் வனவிலங்குகளைப் புகைப்படம் எடுக்கச் சென்றார் புகைப்படக்கலைஞர் டேவிட் ஜே.ஸ்லேட்டர் . அப்போது கேமராவை ஓரிடத்தில் வைத்துவிட்டு காட்டுப்பகுதியில் உலவ சென்றிருக்கிறார்.  அப்போது நருடோ என்னும் சிம்பான்சி  வகை குரங்கு அந்த கேமராவை எடுத்து அதை பயன்படுத்தியது. 

அப்போது யதார்த்தமாக தன்னைத் தானே போட்டோ எடுத்துக்கொண்டது அந்தக் குரங்கு. பின் கேமராவையும் அங்கேய வைத்துவிட்டு சென்றது. இதனையடுத்து அங்கு வந்த ஸ்லேட்டர் கேமராவை பார்த்த போது அதில் குரங்கு செல்ஃபி எடுத்திருப்பதைக் கண்டு வியப்படைந்தார். 

பின்னர் அந்த குரங்கின் செல்ஃபியை சமூகவலைதளங்களிலும், இணையதளத்திலும் வெளியிட்டார். அந்த காலகட்டத்தில் அந்தப் புகைப்படம் வைரலாக பரவியது. இந்த புகைப்படத்துக்கு டேவிட் காப்புரிமை கோரிய நிலையில், பீட்டா அமைப்பு காப்புரிமை வழங்கக்கூடாது என அமெரிக்கா நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் காப்புரிமை சட்டங்கள் மனிதர்களுக்கானது. இந்த சட்டத்தில் விலங்குகள் உரிமை கோர முடியாது. விலங்குகள் உரிமைக் கோர எந்த அமைப்பும் கோர முடியாது. மேலும் குரங்கு தரப்பில் எந்த விலங்குகள் அமைப்பும் உரிமையை அதுக்கு பதிலாக கோர முடியாது என விளக்கம் அளித்து தீர்ப்பளித்தது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP