அமெரிக்காவில் காணாமல் போன இந்திய குடும்பம்; பெண் உடல் கண்டுபிடிப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்த இந்திய குடும்பத்தை சேர்ந்தவர்கள் கடந்த வாரம் மாயமானார்கள். தற்போது, கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு பெண்ணின் உடல், அந்த குடும்பத்தை சேர்ந்தவருடையது தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
 | 

கலிபோர்னியாவின் சாண்டா க்ளாரிட்டா பகுதியை சேர்ந்த இந்தியர் சந்தீப் தோட்டபில்லி. 41 வயதான இவர் யூனியன் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். தனது மனைவி, சௌமியா, குழந்தைகள் சித்தாந்த், சாச்சியுடன் அண்டை மாநிலமான போரட்லாந்தில் இருந்து கலிபோர்னியாவில் உள்ள, சான் ஹோஸே நகருக்கு வந்து கொண்டிருந்தார். கடந்த வாரம் 5ம் தேதி, 4 பேரும் குடும்பத்தோடு மாயமானார்கள். 

4 பேரும் காணாமல் போனதாக கலிபோர்னியா காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது . அந்த பகுதியில் கடும் மழை பெய்ததால்  மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், நீர் வடியத் துவங்கிய பின்னர் காணாமல் போனவர்கள் சென்ற காரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். ஆனால், காரை முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. 

இந்நிலையில், இன்று சௌமியா தோட்டபில்லியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாள்ளை அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. மற்றவர்ளை கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP