உலக வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேறுவோம் - ட்ரம்ப் மிரட்டல்

அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருவதை மாற்றி கொள்ளாவிட்டால் உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேறுவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
 | 

உலக வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேறுவோம் - ட்ரம்ப் மிரட்டல்

அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருவதை மாற்றி கொள்ளாவிட்டால் உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேறுவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். 

உலக வர்த்தக அமைப்பின் செயல்பாடுகளை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் ப்ளூம்பர்க் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ''உலக வர்த்தக அமைப்பு, அடிக்கடி அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், அந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிடும்'' என்று கூறியுள்ளார். 

சமீபத்தில் மெக்சிகோ - வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை (நாஃப்டா) சீரமைக்க ஒப்புக் கொண்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்தார். மேலும், அது ஒரு நல்ல ஒப்பந்தம் என்றும் இரண்டு நாடுகளுக்கும் சிறப்பான ஒன்று என்றும் தெரிவித்தார். ஆனால் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒரு வருடத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டபோது, இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்தார்.

உலக நாடுகள் இடையேயான வர்த்தக சட்ட திட்டங்களை வகுக்கவும், பல்வேறு நாடுகள் இடையே ஏற்படுகிற வர்த்தக பிரச்சினைகளை தீர்க்கவும் உலக வர்த்தக அமைப்பு 1995-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த அமைப்பானது, அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக ட்ரம்ப் புகார் எழுப்பி வருகிறார்.

முன்னதாக பாக்ஸ் நியூஸ் செய்தி சானலுக்கு பேட்டி அளித்த ட்ரம்ப்,  அனைவருக்கும் பலன் அளிக்கத்தக்கதாக உலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனாலும், நாம் அங்கு அனைத்து வழக்கிலும் தோல்வியையே சந்தித்து வருகிறோம் என குறிப்பிட்திருந்தார்.  அதே போல, அமெரிக்க வர்த்தக அமைப்பு பிரதிநிதி ராபர்ட் லிதிசைர், அமெரிக்காவின் இறையாண்மையில் உலக வர்த்தக அமைப்பு தலையிடுகிறது என்று ஏற்கெனவே குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP