Logo

கிம் ஜோங் உன்னை சந்திக்கிறார் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர்!

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பேயோ, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சந்தித்து அணு ஆயுதங்களை கைவிடுவது பற்றியும், ட்ரம்ப் - கிம்மின் அடுத்த சந்திப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 | 

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஜூன் மாதம் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், அணு ஆயுத உற்பத்தியை வடகொரியா கைவிட வேண்டும் என்றும், அதை அமெரிக்க கண்காணிப்பாளர்கள் நேரில் பார்த்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், அணு ஆயுத உற்பத்தியை வடகொரியா முற்றிலும் நிறுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என அமெரிக்க கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையே, ட்ரம்ப்புக்கு கிம் எழுதிய கடிதத்தில், மீண்டும் நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தார். அடுத்த சந்திப்புக்கு ட்ரம்ப்பும் அனுமதி கொடுத்தார். இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பேயோ, ஜப்பான் சென்று அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின், வடகொரியாவுக்கு சென்ற அவர், கிம்மை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

கிம்முடன் பாம்பேயோ நடத்தும் 4வது பேச்சுவார்த்தை இதுவாகும். இந்த பேச்சுவார்த்தையில், அணு ஆயுதங்களை வடகொரியா முற்றிலும் கைவிட வேண்டும் என்றும், அதை அமெரிக்க கண்காணிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ட்ரம்ப் - கிம்மின் அடுத்த சந்திப்பை சீக்கிரமே நடத்தவும் இதில் பேசப்பட்டதாக தெரிகிறது. 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP