ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை

ஐஎஸ் தீவிரவாதிகளை அழித்து விட்டதாகவும், அமெரிக்கப் படைகளை சிரியாவில் இருந்து பின்வாங்க போவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்க மூத்த ராணுவ ஜெனரல் அதை மறுத்துள்ளார்.
 | 

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் பின் வாங்குவதற்காக ஐஎஸ் வீழ்ந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். அமெரிக்க ராணுவ வல்லுநர்களின் ஆலோசனை இல்லாமல் அதிபர் ட்ரம்ப் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருந்ததால், அமெரிக்க பாதுகாப்புத் துறையில் இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஐஎஸ்-ஸுக்கு எதிராக இறுதிகட்ட போர் தற்போது நடைபெற்று வருகிறது. அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படைகள் போரிட்டு வரும் நிலையில், அமெரிக்க ராணுவ ஜெனரல் ஜோசப் வோட்டல், ஐஏஎஸ்-ஸின் அச்சுறுத்தல் இன்னும் தீரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "ஐஎஸ் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. தலைவர்கள், தீவிரவாதிகள், நிதி உதவி அளிப்பவர்கள், என ஐ.எஸ்-ஸின் நடவடிக்கைகள் தொடர போதிய ஆதரவு உள்ளது. எனவே, தொடர்ந்து நெருக்கடி கொடுத்தால் மட்டுமே ஐஎஸ்-ஸை முழுவதும் வீழ்த்த முடியும்" என்று தெரிவித்தார்

அமெரிக்கப் படைகளை பின் வாங்குவதால், அமெரிக்க ஆதரவு பெற்ற சிறிய படைகளால் தொடர்ந்து இதே வலிமையுடன் போரிட முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP