கியூபாவில் முதல்முறையாக செல்போனில் இணைய வசதி: சீர்த்திருத்தம் செய்யும் புதிய அதிபர்

கியூபாவில் குறிப்பிட்ட சில அரசு சார்ந்த ஊழியர்களுக்கு மட்டும் செல்போனில் இணையதள சேவை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 | 

கியூபாவில் முதல்முறையாக செல்போனில் இணைய வசதி: சீர்த்திருத்தம் செய்யும் புதிய அதிபர்

கியூபாவில் குறிப்பிட்ட சில அரசு சார்ந்த ஊழியர்களுக்கு மட்டும் செல்போனில் இணையதள சேவை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

கியூபாவில் முதல் முறையாக பத்திரிகை, ஊடகத்தினர் உள்ளிட்ட குறிப்பிட்ட அரசு சார் துறையில் இருப்பவர்களுக்கு மட்டும் செல்போன்களில் இணைய சேவை வசங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டுக்குள் அனைவரது செல்போன்களுக்கும் இணைய வசதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு வரை கியூபாவில் மிகச் சில இடங்களில் மட்டுமே இணைய வழங்கப்பட்டது. அதாவது அரசு சார்ந்த இடங்களில் மட்டுமே இணைய வசதி இருந்தது. பின்னர் குறிப்பிட்ட அலுவலகங்களில் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டது. 

கம்யூனிச கொள்கைகளை உடைய கியூபாவில் புதிதாக பதவியேற்றிருக்கும் அதிபர்  அரசியல் சாசனத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார்.  நாடாளுமன்றத்தில் இதற்கான பல தீர்மானங்கள் அடுத்தடுத்து கொண்டு வரப்படும் என்று அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

1976-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட அரசியல் சாசனத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் திருத்தங்களின் மூலம், அரசின் கட்டமைப்பு, நீதிமன்றங்கள், பொருளாதாரம் ஆகியவற்றிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. 

திருத்தப்பட்ட அரசமைப்புச் சட்டத்திலும் கியூபாவின் முழு அரசியல் அதிகாரம் மிக்க கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி திகழும். கம்யூனிச கொள்கைகள் தொடர்ந்து பின்பற்றப்படும். எனினும், பொருளாதார தாரளமாயமாக்கலுக்கும் இடமளிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP