ஜி7 நாடுகளிடம் சண்டை பிடித்த ட்ரம்ப்!

கனடாவின் கியூபெக் சிட்டியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மற்ற நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து அறிக்கையை வெளியிட மறுத்துவிட்டார்.
 | 

ஜி7 நாடுகளிடம் சண்டை பிடித்த ட்ரம்ப்!

கனடாவின் கியூபெக் சிட்டியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மற்ற நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து அறிக்கையை வெளியிட மறுத்துவிட்டார்.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது புதிய வரிகளை ட்ரம்ப் விதித்தார். இது மற்ற நாடுகளிடையே கடும் கோபத்தை கிளப்பியது. இதையடுத்து கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் அமெரிக்க  பொருட்கள் மீது புதிய வரிகளை சுமத்தின. 

இந்த குழப்பமான சூழ்நிலையில் ஜி 7 மாநாட்டிற்காக கனடா சென்ற ட்ரம்ப், அங்குள்ள தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பொருளாதாரம், சர்வதேச உறவு என்பது போன்ற பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. அப்போது, கனடா அதிபர் ஜஸ்டின் ட்ருடோ, "கனடா மக்கள் மிகவும் பொறுமையானவர்கள். ஆனாலும், நியாயமானவர்கள். எங்களை யாராலும் ஆட்டிப் படைக்க முடியாது. அதிபர் ட்ரம்ப்பிடம் பேசியபோது, கனடா மக்களின் அதிருப்தியை தெரிவித்தேன்.  எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது அமெரிக்க கொண்டு வந்த வரிகள் எங்கள் மக்களை கோபப்படுத்தியது. மேலும், அதை தேசிய பாதுகாப்புக்காக என அதிபர் சொன்னது மக்களுக்கு மேலும் காயத்தை ஏற்படுத்தியது. முதலாம் உலகப் போர் முதல் அமெரிக்கர்களோடு தோளோடு தோள் நின்ற கனடா மக்களை இது இழிவுபடுத்துவது போல அமைந்தது" என்றார். 

ட்ருடோவின் இந்த பேச்சு ட்ரம்ப்பை கோபப்படுத்தியதாக தெரிகிறது. ஜி7  கூட்டத்தில் இருந்து சீக்கிரமாகவே கிளம்பினார் ட்ரம்ப். அமெரிக்கா உட்பட மற்ற நாடுகள் சேர்ந்து ஒரு அறிக்கையை வெளியிடுவதாக இருந்தது. முதலில் அந்த அறிக்கைக்கு ஒப்புதல் தெரிவித்த ட்ரம்ப், பின்னர் ட்ருடோவின் பேச்சை கேட்டபின், அந்த அறிக்கையில் இருந்து அமெரிக்கா விலகுவதாக தெரிவித்தார். கனடா அதிபர் பொய் சொல்வதாகவும், தங்கள் அனைத்தின் விவசாயிகள் மீது கனடா அதிக வரிகள் சுமத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP