ஃபிளாரன்ஸ் புயல் தாக்கும் அபாயம்; 15 லட்சம் பேர் இடமாற்றம்!

அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களை ஃபிளாரன்ஸ் புயல் தாக்க உள்ளதால், கரையோர பகுதிகளில் உள்ள 15 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட உள்ளனர்.
 | 

ஃபிளாரன்ஸ் புயல் தாக்கும் அபாயம்; 15 லட்சம் பேர் இடமாற்றம்!

அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களை ஃபிளாரன்ஸ் புயல் தாக்க உள்ளதால், கரையோர பகுதிகளில் உள்ள 15 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட உள்ளனர்.

அட்லான்டிக் பெருங்கடலில் உருவாகியுள்ள பெரும் புயல் சின்னத்திற்கு ஃபிளாரன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது கேட்டகரி 4ஆக இருக்கும் இந்த புயல், 5ஆக மாறவுள்ளதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புயலால் மணிக்கு 220 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கிழக்கு மாகாணங்களான விர்ஜினியா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கேரோலினா, மேரிலாந்து, வாஷிங்க்டன் டி.சி, ப்ளோரிடா ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையோர பகுதிகளில் பலத்த உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

ஆபத்தான பகுதிகளை இருந்து சுமார் 15 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த வாரம் உச்சகட்ட உக்கிரம் கொண்ட கேட்டகரி 5 புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்க்டன் மற்றும் மேரிலாந்து மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு இதனால் கடும் மழை மற்றும் வெள்ளம் இருக்கும் என்றும், பல இடங்களில் 10-13 அடி வரை தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP