குழந்தை அழுததினால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப் பட்ட குடும்பம்- வைரல் வீடியோ

குழந்தை அழுததினால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப் பட்ட குடும்பம்- வைரல் வீடியோ
 | 

குழந்தை அழுததினால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப் பட்ட குடும்பம்- வைரல் வீடியோ


அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள மிட்வே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகளுடன்  அட்லாண்டா செல்ல தயார் நிலையில் இருந்தது.  அப்போது சக பயணி ஒருவர் தனது 2வயது மகள் மற்றும் மனைவியுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில்  அமர்ந்துள்ளார். அப்போது அவரின் மகள் பயத்தின் காரணமாக அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமராமல் தந்தையின் மடி மீது அமர்ந்திருந்துள்ளார். ஆனால்  இதற்கு விமான அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.    

மேலும், குழந்தையின் அழுகையை நிறுத்த சொல்லியும், அவளை தனி சீட்டில் உட்கார சொல்லியும் வற்புறுத்தியுள்ளனர். அவ்வாறு இல்லையெனில் விமானத்தை விட்டு இறங்கும்படியும் கூறியுள்ளனர்.  

 இதனால் வேறு வழியின்றி  குடும்பம்   விமானத்தைவிட்டு இறங்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோவை சக பயணி ஒருவர் தனது மொபைல் போனில் படம்  பிடித்து இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்.  தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.      

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP