ஃபேஸ்புக்ல கம்பு சுத்துறவரா நீங்க...அப்போ அமெரிக்க விசா கிடைப்பது கஷ்டம் தான்!

அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்க இனி பேஸ்புக், ட்விட்டர் தகவல்களையும் வழங்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
 | 

ஃபேஸ்புக்ல கம்பு சுத்துறவரா நீங்க...அப்போ அமெரிக்க விசா கிடைப்பது கஷ்டம் தான்!

அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்க இனி பேஸ்புக், ட்விட்டர் தகவல்களையும் வழங்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்போர், தங்களது 5 ஆண்டு கால சமூக ஊடக செயல்பாட்டை விளக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பேஸ்புக், ஃபிளிக்கர், இன்ஸ்டாகிராம், யூ டியூப், ட்விட்டர்  போன்றவற்றின் செயல்பாடுகள் மூலம் அந்நபரின் 5 ஆண்டு கால நடவடிக்கைகள் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய விதிகளால் விசா கோரி விண்ணப்பித்துள்ள 15 மில்லியன் வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்தியர்களுக்கு அமெரிக்கா 8.72 லட்சத்திற்கும் மேற்பட்ட விசாக்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP